இல்மனைட் அகழ்வுக் குழு மக்களை சந்திக்க கோரிக்கை விடுத்துள்ளது -தவிசாளர் கமலராஜன்


அகத்தியன் செய்திப் பிரிவு

புகைப்பட உதவி (யதுர்ஷன்)

கடந்த சில தினங்களுக்கு முன்னராக திருக்கோவில் பிரதேச எல்லைக்குட்பட்ட உமிரி பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வு தொடர்பில் மக்களிடையில் எதிர்பு வெளிப்பட்டிருந்தமை நாமறிந்த விடையமாகும்.

இது தொடர்பில் திருக்கோவில் பிரதேச சவிசாளர் அவர்களை தொடர்பு கொண்டு நாம் வினவியபோது ...

இது திருக்கோவில் பிரதேசத்தில் இரண்டாவது முறையாக இடம் பெற்றுள்ளது இரண்டு தடவைகளிலும் எமது பிரதேச வளங்களை அபகரிக்க பிரதேச மக்கள் பிரதேச செயலகம் மற்றும் சபை அனுமதி மறுத்தும் இவர்கள் மீண்டும் வந்திருப்பது ஒரு கேள்விக்குறியாக அமைகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த குழுவினர் திருக்கோவில் உமிரி பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளனர் இவர்கள் பிரதேச சபைக்கு எது வித அறிவிப்பும் விடுக்கவில்லை மின்னஞ்சல் ஊடாகவே, கடிதமூடாகவே எது வித அறிவித்தலும் தராமல் உமிரி பிரதேசத்திற்கு வருகை நத்துள்ளனர்.இவர்கள் வருவது பிரதேச செயலாளர் அறிவித்த பின்னரே நான் அறிந்தேன்.

அதன் பின்னர் குறித்த உமிரி பிரதேசத்திற்கு விஜயம் செய்து மக்கள் இதனை ஏற்கமாட்டார்கள் என பிரதேச சபை இதற்கு அனுமதி மறுத்துள்ள கடிதத்தினையும் அவர்களிடமும் பிரதேச செயலகத்திற்கும் ஒப்படைத்தேன்.

இன்போது மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த இல்மனைட் அகழ்விற்கு அனுமதி கொடுத்து விட்டு எங்கள் மக்கள் மத்தியில் சேவை செய்ய முடியாது மக்கள் அனுமதியின்றி அனுமதிக்க முடியாது என்று தெரிவித்ததாகவும் பிரதேச சபை தவிசாளர் குறிப்பிட்டார்.

இதற்கு இல்மனைட் அகழ்வு குழுவினர் மறுப்பு தெரிவித்ததுடன் மக்களை சந்தித்து தாங்கள் மக்களுடன் கலந்துரையாடி மக்களின் முடிவை கேட்ட பின்னர் முடிவெடுப்போம் என்று தெரிவித்துள்ளர்.

திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த 2017. டிசம்பர் மாதம் மக்கள் இல்மனைட் அகழ்விற்கு பாரிய எதிர்ப்பு தெரிவித்தும் இக் குழுவினர் மீண்ம் எமது பிரதேச வளங்களை அபகரிக்க வருவது தொடர்பிரல் மக்களிடையில் குழப்பகரமான நிலை நிலவுகின்றது.

இதற்கு இறுதி முடிவு ஒன்று எடுக்க எதிர்வரும் ஒரு மாத காலப்படுதிக்குள் பிரதேச செயலகத்தில் இல்மனைட் அகழ்வு குழுவிற்கும் மக்களுக்கும் இடையில் பொது கூட்டம் ஒன்று இடம் பெறும் எனவும் குறிப்பிட்டார் .

மேலும் இல்மனைட் அகழ்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டு விட்டது என்று போலி முகநுாலில் பரவும் செய்திகள் போலியானது என்றும் மக்கள அவற்றை நம்ப வேண்டாம் என்றும் பிரதே செயலாயர் கஜேந்திரன் உள்பட அனைவரும் இதற்கு முற்று முழுதாக மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் இறுதி முடிவு மக்கள் கையில் உள்தாகவும் தெரிவித்தார்
No comments: