இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மத்தியகிழக்கு நாடுகளில் தங்கியிருந்ந 664 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி கட்டாரில் இருந்து 81 இலங்கையர்களும்,ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 293 இலங்கையர்களும்  மற்றும் சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து 290 இலங்கையர்களும்  இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் மத்தளை மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்களுக்கு வருகை தந்த அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: