வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு


அநுராதபுரம் - குருணாகல் பிரதான வீதியின் சாவஸ்திபுர பகுதியில் இன்று அதிகாலை முச்சக்கர வண்டி ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியை செலுத்திய பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த ஆண் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

60 வயதான தந்தையும், 28 வயதான மகளுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுவதோடு,இச்சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: