பாராளுமன்ற முதல் அமர்வின் இறுதிநாள் விவாதம் இன்று


பாராளுமன்ற முதல் அமர்வின் இறுதி நாள் விவாதம் இன்று  இடம்பெறவுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை விவாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் தீர்மானத்திற்கமைய கடந்த 08 ஆம் திகதி முதல்  நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைய இன்றைய தினம் பிற்பகல் 1 மணி முதல் மாலை 6.30 மணிவரை சபை அமர்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: