சஜித் மீதான கல்வீச்சுத் தாக்குதல்-இருவர் கைது


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட நிகழ்வின் போது கல்வீச்சு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரத்மலானையில் இடம்பெற்ற நிகழ்வில் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட சமயத்தில் அடையாளம் தெரியாத குழுவினர் கல்வீச்சு தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று இரவு இரண்டு சந்தேக நபர்களை இரத்மலானை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவர்களை இன்று இரத்மலானை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

No comments: