நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறதாக தெரியவந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், அவுஸ்ரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து 764 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கட்டார் தோஹாவிலிருந்து நேற்றிரவு 39 இலங்கையர்கள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தடந்துள்ளதாகவும்,டுபாயில் இருந்து 413 இலங்கையர்களும், ஜப்பானின் நரிட்டாவிலிருந்து 18 இலங்கையர்களும், அவுஸ்ரேலியாவின் மெல்போர்னில் இருந்து 294 இலங்கையர்களும் இன்று காலை நாட்டை வந்தடைந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விமான நிலையத்தை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன்,அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments: