வீதி ஒழுங்கை சட்டம் அமுல்படுத்தப்பட்ட வீதிகளில் வீதிவிளக்குகள் ஆராயப்படவுள்ளது


வீதி ஒழுங்கைச் சட்டம்  அமுல்படுத்தப்படுகின்ற பகுதிகளில் வீதி விளக்குகள் இன்றைய தினம் ஆராயப்படவுள்ளதாக போக்குவரத்து தலைமையகத்தின் பணிப்பாளர் சிரேஸ்ட காவற்துறைமா அதிபர் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

குறித்த வீதி விளக்குகளின் தரவுகள் பெறப்பட்டு அதிக வாகனங்கள் பயணிக்கும் வீதிகளுக்கு அதிக காலமும்,குறைந்த வாகனங்கள் பயணிக்கும் வீதிகளுக்கு குறைந்த காலமும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளிலும், பிரதான 4 வீதிகளை மையமாகக் கொண்டு காலை 6.00 மணிமுதல் காலை 9.00 மணிவரையும்,மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையும் இந்த வீதி ஒழுங்கைச்சட்டம் கடந்த 14ம் திகதி முதல்  அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்த வீதி ஒழுங்கைச்சட்டம் அமுல்படுத்தப்பட்டு முதல் 2 வாரங்களுக்கு விதிமுறைகளை மீறுகின்ற சாரதிகளுக்கு எந்தவித அபராதம்,சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.எனினும் இன்று முதல் வீதி ஒழுங்கை சட்டத்தை மீறும் சாராதிகளுக்கு அபராதம் மற்றும் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து தலைமையகத்தின் பணிப்பாளர் சிரேஸ்ட காவற்துறைமா அதிபர் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார். 

No comments: