பாடசாலைகளின் வளர்ச்சியிலும் புதிய கட்டிடங்களை அமைப்பதிலும் முழு கவனம் செலுத்தியவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான்.

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


மலையக பாடசாலைகளின் வளர்ச்சியிலும் பாடசாலைகளுக்கான புதிய கட்டிடங்களை

பெற்றுகொடுப்பதில் முழு கவனத்தினை செலுத்தியவர் அமரர் ஆறுமுகன்
தொண்டமான் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி
ராமேஸ்வரன் தெரிவித்தார்.

04.09.2020.வெள்ளிக்கிழமை ஹட்டன் சென் ஜோன் பொஸ்கோ கல்லூரியின் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், இராஜாங்க அமைச்சர்  ஜீவன் தொண்டமான் இடைக்கால வரவு செலவு திட்டம் நிறைவடைந்த பிறகு பாடசாலைகளுக்கு எது போன்ற வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்கலாம் என
எம்மை அழைத்து கலந்துரையாடினார்.

அப்போது தான் ஹட்டன் பொஸ்கோ கல்லூரியின் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தினை
மாணவர்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என எண்ணி இதனை திறப்பதற்கு தாம்
முடிவெடுத்தோம். 

நான் மத்திய மாகாண கல்வி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் பல பாடசாலை கட்டிடங்கள் அமைக்கப்பட்டது. 

மாகாண சபை கலை கற்பிக்கும் சில பாடசாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இருந்த போதிலும் சில பாடசாலை கட்டிடங்கள் அமைக்கப்பட்டது. சில கட்டிடங்கள் அமைக்கப்படவில்லை. 

ஒப்பந்தக் காரர்களுக்கு ஒரு முக்கிய பொறுப்பு காணப்படுகிறது. பொறுப்பினை ஏற்று
கொண்டால் அதனை நிறைவுசெய்து காட்டவேண்டும். அரசியல்வாதியான எமது கடமை
கட்டப்படுகின்ற பாடசாலைகளுக்கு நீதியினை வழங்குவதே. கடந்த அரசாங்கத்தில் மஹிந்தராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் கல்விக்கு முதலிடம் கொடுத்தார். அமரர் ஆறுமகன் தொண்டமானை போல் துணிச்சலான தலைவர் எமக்கு தற்பொழுது கிடைத்திருக்கிறார் என குறிப்பிட்டார்.

No comments: