சபரிமலையில் மண்டல கால பூஜையில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி


சபரிமலையில் மண்டல கால பூஜையில் பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் பங்கேற்பதற்கு அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நவம்பர் மாதம் ஆரம்பமாகும் மண்டலகால பூஜையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவு செய்ய முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது onlineஇல் பதிவு செய்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பக்தர்கள் கொரோனா நெகட்டீவ் சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன்  நெய்யபிஷேகத்துக்குப் பதிலாக மாற்று ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும்,  பக்தர்கள் சன்னிதானத்தில் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: