மின்கம்பம் சரிந்து வீழ்ந்து குடியிருப்பு சேதம்
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்
நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் மின்கம்பமொன்று உடைந்து வீழ்ந்தமையினல் அப்பகுதியின் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதுடன் குடியிருப்பு ஒன்றும் சேதமாகியுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
அதிக காற்றுடன் கூடிய மழை வானிலையால் இன்று காலை 05 மணியளவில் நோட்டன் – தியகல வீதியில் அப்கட் பிரஜாசாலைக்கு அருகிலுள்ள மின் கம்பம் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் மின் கம்பம் உடைந்து குடியிருப்பொன்றின் மீது வீழ்ந்துள்ளது.
இதனால் குறித்த குடியிருப்பின் கூரை சேதமடைந்துள்ளதுடன் நோட்டன் பிரிட்ஜ் பிரதேசத்தின் மின் விநியோகம் காலை 05 மணி முதல் தடைப்பட்டுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments: