பாடசாலை சீருடைத்துணிகள் தொடர்பாக அரசாங்கத்தின் தீர்மானம்


2021ம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்காக வவுச்சருக்குப் பதிலாக சீருடைத்துணிகளை வழங்க, நேற்றைய தினம் கூடிய அமைச்சரவையில்  அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் முதல் பாடசாலை மற்றும் பாதுகாப்பு படையினரின் சீருடை விநியோகத்தில், உள்ளூர் உற்பத்தியாளர்களை அதிகளவில் ஈடுபடுத்துவதற்கான இயலுமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பாரிய மற்றும் சிறு அளவிலான உள்நாட்டு உற்பத்தியாளர்கள் அதிக ஈடுபாட்டுடன், உயர் தர ஆடை உற்பத்தியை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்நாட்டு ஆடைகளை கொள்வனவு செய்வதன் மூலம், கல்வி அமைச்சுக்கு வருடமொன்றில் 80 மில்லியனுக்கும் அதிக தொகை நிதியை சேமித்துக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தங்கொட்டுவ,கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளிலுள்ள கைத்தொழில் பேட்டைக்கு நேற்று கண்காணிப்பு  விஜயம் மேற்கொண்ட போதே  ஜனாதிபதி இந்த விடயங்களை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: