சுற்றுலாப்பயணிகளுக்காக விமானநிலையங்களை விரைவாக திறப்பதற்கு எதிர்பார்ப்பு-சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவிப்பு


கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் விமான சேவையை மீண்டும் ஆரம்பித்து சுற்றுலாப்பயணிகளுக்காக நாட்டை திறந்த பின்னர் குழுக்களாக வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும்,சுற்றுலா பயணிகளை குழுக்களாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடைமுறை வகுக்கப்பட்டிருப்பதாகவும் சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் உள்ள மாலைதீவு தூதுவர் ஓமார் அப்துல்ரசாக் மற்றும் பிரசன்ன ரணதுங்கவிற்கு இடையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுகளுக்கு இடையிலான சுற்றுலாத் தொழில்துறையை மேம்படுத்தவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடுவதற்காக இந்த சந்திப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் போது மாலைதீவு தூதுவர் விமான நிலையங்களை எப்போது திறப்பதற்கு எதிர்பாரத்துள்ளீர்கள் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் கேட்டுக்கொண்டதாகவும்,கட்டுநாயக்கா மற்றும் மத்தள விமான நிலையங்களை விரைவாக சுற்றுலாப்பயணிகளுக்காக திறப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர்  குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: