தீ விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பாக வெளியான தகவல்

MT NEW DIAMOND எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இதனை  உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை தீயணைப்பு  நடவடிக்கைகளுக்காக முதற்தடவையாக   விமான ஊடாக இரசாயனம் தெளிப்பதற்கு bell 12 ரக விமானம் பயன்படுத்தப்பட்டதாகவும்  விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படைக்கு சொந்தமான 17 பாரிய கப்பல்கள்   மற்றும்  இந்திய கடற்படைக்கு சொந்தமான  யுத்தகப்பல் உட்பட நான்கு கப்பல்கள் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான 5 கப்பல்கள்  என்பனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை எண்ணெய்க் கசிவினை கட்டுப்படுத்துவதற்காக இந்திய கடற்படைக்கு சொந்தமான படகு ஒன்று குறித்த பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் சிங்கப்பூர் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் இருந்து பயணித்துள்ள   இரண்டு படகுகள் குறித்த கப்பல் நிறுத்தப்பட்டுள்ள பகுதியை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின்  தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினர்  குறித்த பகுதிக்கு பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீப்பற்றிய எம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், கப்பலில் இருந்து எண்ணெய் கசிவைத் தடுக்கும் வகையில் இந்திய கடற்பாதுகாப்பு திணைக்களத்தின் இரு பெண்கள் உள்ளிட்ட 20 பொறியியலாளர்களும் மத்தள சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபுணர் குழு குறித்த கப்பல் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை கடற்படையின் யுத்தகப்பல் ஒன்றின் ஊடாக தீப்பற்றிய கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: