நோர்வூட்டில் மின் தகன நிலையம் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

நீலமேகம் பிரசாந்த்


நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட மக்கள் இதுவரையில் மின் தகனம் செய்யவேண்டுமென்றால் தலவாக்கலை அல்லது கொட்டக்கலை பகுதியை நோக்கியே செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது.ஆனால் தற்போது நோர்வூட் பகுதியிலேயே மின் தகனம் செய்தற்கான மின் தகன நிலையம் 27/09/2020(ஞாயிற்றுக்கிழமை) உத்தியோகப்பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

மின் தகன நிலையத்தை இனி மக்கள் தொடர்ந்தும் பயன்படுத்த முடியும் என நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேலு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிடுகின்றபோது கடந்த 2014 ம் ஆண்டு அமரர் ஆறுமுகன் தொண்டமானின் நிதி ஓதுக்கீட்டின் கீழ் நோர்வூட் பிரதேசத்தில் மின் தகன நிலையம் அமைப்பதற்கான 12,000,000 பணம் ஒதுக்கபட்டு கட்டிட வேலைகள் நிறைவுசெய்யப்பட்டன.

இந்த வேலைத்திட்டமானது அம்பகமுவ பிரதேச சபையின் முலமாக முன்னேடுக்கப்பட்டது இருந்த போதிலும்  இடைக்கால ஆட்சி காலத்தில் இதற்கான  பூர்த்தி செய்வதற்கு உபகரண தேவைக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. ஆனால் தற்போது நோர்வூட் பிரதேச சபையின் ஊடாகவும் தவிசாளர் என்ற ரீதியிலும் ஐந்து லட்சம்  பணம் ஓதுக்கீடு செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

No comments: