நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, வெவ்வேறு நாடுகளில் தங்கியிருந்த  மேலும் 196 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக கொவிட்-19 கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

ஜேர்மனியில் இருந்து 11 பேரும்,  டுபாயில் இருந்து 20 பேரும், தோஹாவிலில் இருந்து 75 பேரும், சென்னையில் இருந்து 2 பேரும், ஜப்பானில் இருந்து 2 பேரும் நோர்வேயில் இருந்து 86 பேரும் இவ்வாறு வருகை தந்துள்ளதாக செயற்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு வருகைதந்த அனைவரும் பி.சி.ஆர்.பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு,  நாட்டிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments: