அனைத்து இனமக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய இந்த நாட்டில் இனவாதத்தை தூண்டுவதற்கு சி.வி.விக்னேஸ்வரன் முயலுகிறார்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


நாட்டில் ஜாதி மதம் பாராது ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற மக்கள் இடையில் 
பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதத்தை தூண்ட முயற்சிப்பதாகவும் பாராளுமன்றில் கன்னி அமர்வின் போது அவர் தெரிவித்த கருத்து முற்றிலும் பிழையான ஒரு கருத்து என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான எஸ்.பி.திஷாநாயக்க தெரிவித்துள்ளார். 

01.09.2020.செவ்வாய்க்கிழமை மஸ்கெலியா சமன்
தேவாலயத்தில் விஷேட வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். 

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்  எஸ். பி.திஷாநாயக்க சி. வி.விக்னேஸ்வரன் தேவையில்லாத ஒரு கருத்தினை  கூறியிருக்கிறார். நாட்டில் முதல் மொழி தமிழ் சிங்களம் என்று கூறுவதற்கு அவர்  அனைத்தும் அறிந்தவர் அல்ல அவர் ஒரு நீதிபதி நாட்டில் என்ன மொழியென கூற அனைத்தும் அறிந்தவர்கள் அதிகமாக உள்ளனர். தொல்பொருள் அறிஞர்கள் உள்ளார்கள் ஆகையால் அவர் முதலில்
சிங்கள மொழியை கற்றுகொள்ள வேண்டும்.தமிழ் மொழியை முறையாக கற்றுகொள்ள வேண்டும் அவருடைய பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை கற்றுகொடுக்க வேண்டும் ஆகவே அவர் கூறிய கருத்து தமிழ் சிங்களம் முஸ்லிம் போன்ற மதங்களை சார்ந்தமக்கள் மத்தியில் பிரச்சினையை  தோற்றுவிக்க கூடிய ஒரு கருத்தினை கூறியிருக்கிறார்.

நாட்டில் இன்று அதிகமான போதைபொருள் விற்பனை செய்வோர்களை தொடர்ந்தும் பொலிஸார் கைது செய்து வருகின்றனர். இதன் பின்னர் யாராவது இருக்க கூடும் சிறைச்சாலையிலும் இது இடம் பெற்று இருக்கிறது. சிறைச்சாலையின் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.  

எனவே எமது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் அதிரடி நடவடிக்கை ஊடாக இது போன்ற சட்டவிரோதமான வியாபாரங்களில் ஈடுபடுவோர்களுக்கு எதிராக நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது. 

எதிர் வரும் காலங்களில் எமது நாடு போதை பொருள்அற்ற ஒரு புனித நாடாக எமது நாடும் மாற்றம் பெறும். அமைச்சு பதவி இல்லை என்பது வேறும் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி வேறு நுவரெலியா மாவட்ட மக்களுக்கு சேவை செய்ய எனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதனை நான் பயன்படுத்தி எமது மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியினை நிச்சயமாக நான் நிறைவேற்றுவேன்  என குறிப்பிட்டார்.





No comments: