நியூ டயமன்ட் கப்பலுக்குள் மீட்புக் குழுவின் மூன்று வெளிநாட்டு நிபுணர்கள் பிரவேசம்MT New Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதை அடுத்து, மீட்புக் குழுவின் மூன்று வௌிநாட்டு நிபுணர்கள் இன்று முற்பகல் கப்பலுக்குள் பிரவேசித்ததாக தெரியவந்துள்ளது.

கப்பல் ஆழமான கடற்பரப்பை நோக்கி தொடர்ந்தும் இழுத்துச் செல்லப்படுவதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் ஏற்பட்ட தீயினால் காயமடைந்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொறியியலாளரின் உடல் நிலை தேறியுள்ளதோடு MT New Diamond கப்பல் தற்போது இலங்கைக்கு சுமார் 40 தொடக்கம் 41 கடல் மைல் தொலைவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் பற்றிய தீ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதை அடுத்து, இன்று அதிகாலை ஒரு மணியளவில் நீர் விசுறும் நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கடலில் படர்ந்துள்ள எண்ணெய் காரணமாக சமுத்திர சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காக நேற்று முதல் இந்திய கரையோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான ட்ரோனியர் ரக விமானம் இரசாயனம் விசுறும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் ​,சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை பெற்றுக்கொண்ட மாதிரிகளை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்குமாறும் சட்ட மா அதிபர் அதிகார சபைக்கு இன்று அலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: