கப்பலின் தீயை கட்டுப்படுத்திய அனைத்து தரப்பினருக்கும் நன்றியினை தெரிவித்த ஜனாதிபதி

MT New Diamond கப்பலின் தீயை அணைக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ள இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக ஆணையம் மற்றும் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது..

தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இவ்வாறு நன்றிகளை தெரிவித்துள்ளார்.

அத்துடள் கடல் பல்லுயிரியலைப் பாதுகாப்பதில் அவர்கள் மேற்கொண்ட பணியை தான் பெரிதும் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: