அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மீண்டும் ஒரு வெற்றியை பெற்று தொடர் சாதனை

 வி.சுகிர்தகுமார்  


அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மீண்டும் ஒரு வெற்றியை பெற்று தொடர் சாதனை படைத்து வருகின்றது.

இதற்கமைவாக அண்மையில் நடைபெற்ற சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டதான புத்தாக்க போட்டியில் கலந்து கொண்டு தேசிய ரீதியில் முதலாவது இடத்தை பிடித்துக்கொண்டது.

சுகாதார தரம் மற்றும் பாதுகாப்பு செயலகத்தினால் நடாத்தப்பட்ட 'கொரோனா தொற்று தீவிரமடைந்த காலப்பகுதியில் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பிற்கான புத்துருவாக்கம்' எனும்  தலைப்பில் பல கட்டங்களாக இடம்பெற்ற போட்டியில் நகரக்கூடிய பாதுகப்பு சிகிச்சைக் கூடு மற்றும் ஏபிஎச் 39 முகக்கவசம் போன்ற புத்தாக்கங்களை சமர்ப்பித்தே இவ்வெற்றியை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பெற்றுக்கொண்டது.

இதற்கான சான்;றிதழ்கள் வழங்கும் நிகழ்வு சர்வதேச பாதுகாப்பிற்கான தின விழாவை முன்னிட்டு சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தலைமையில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளின் முன்னிலையில் அன்மையில் இடம்பெற்றது.

இதன்போது  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எம்.ஜவாஹிர் மற்றும் வைத்தியர்  றெமன்ஸ் மைக்கல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு அமைச்சரிடம் இருந்து சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.No comments: