வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பிரதமர் உறுதி

வட மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டம்,கிளிநொச்சி,மன்னார் மாவட்டத்தில் இந்திய மீனவர்களின் வருகையினால் உள்ளூர் மீனவர்களின் வருமானமும் வாழ்வாதாரமும் பாரியளவில் பாதிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக வடக்கு மீனவ சங்கங்களுக்கும், முக்கிய அதிகாரிகளுக்கும் மற்றும்  கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையில் இன்று அலரி மாளிகையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது..

இக்கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் இந்திய மீனவர்களின் பிரச்சினைகளை வெகுவிரைவில் தீர்த்து வைப்பதற்காக அதிமேதமிகு ஜனாதிபதி அவர்களும்,கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும்,இந்திய பாரத பிரதமர் கௌரவ நரேந்திர மோடி அவர்களுடன் காணொளி ஊடான கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெறவுள்ளதாக யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் இந்திய மற்றும் உள்ளூர் மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை வெகுவிரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.No comments: