இன்றைய வானிலை


நாடு முழுவதும் காற்று நிலைமையும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலையும் செப்டம்பர் 18ம் திகதியிலிருந்து 21ம் திகதி வரை தற்காலிகமாக சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்குசரிவுப்பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும்,நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றின்வேகம் அதிகரித்துக் காணப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே, இது தொடர்பில் கடலுக்கு செல்பவர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: