கண்டி - பூவெலிகட பகுதியில் மாடிக்கட்டிடம் தாழிறக்கம் - குழந்தை பலி

 (க.கிஷாந்தன்)


கண்டி - பூவெலிகட பகுதியில் மாடிக்கட்டிடம் ஒன்று தாழிறிங்கிய அனர்த்தத்தில் இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருந்த நிலையில், மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளது.

(20.09.2020) இன்று அதிகாலை குறித்த 5 மாடிக்கட்டிடம் தாழிறிங்கிய நிலையில், அதன் அருகில் உள்ள வீடொன்றின் மீது விழ்ந்து அனர்த்ததிற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அனர்த்தத்தில் 5 பேர் சிக்கியிருந்த நிலையில் அவர்களில் இதுவரை 2 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மேலும் 2 பேரை காணவில்லை என்பதுடன் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







No comments: