நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்


தேங்காயின் சுற்றளவுக்கு அமைய நிர்ணயிக்கட்ட விலைக்கு தேங்காயினை விற்பனை செய்யாவிடின் எதிர்காலத்தில் சுற்றிவளைப்புகளை முன்னெடுத்து வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்றைய தினமும் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளை பயன்படுத்தி வர்த்தகர்களுடன் நுகர்வோருக்கும் அது குறித்து அறிவுறுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதரிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்களின் அடிப்படையில் ஒரு தேங்காயின் அதிகபட்ச சில்லறை  விலையாக 60 ரூபா முதல் 70 ரூபா வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 12 அங்குலத்திற்கும் குறைவான தேங்காய் 60 ரூபாவிற்கும், அதேபோன்று  12 முதல் 13 அங்குலம் வரையிலான தேங்காய் 65 ரூபாவிற்கும் மாத்திரமே விற்பனை செய்ய முடியும்.

அத்துடன், 13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காய் 70 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியுமென நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments: