வட-கிழக்கில் முடக்கல் போராட்டம் நடத்த தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானம் !

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிராக எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக பேசிவந்த கட்சிகளும் அமைப்புகளும் இன்றையதினமும் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடி இருந்தன.

அதனடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 28 ஆம் திகதி நிர்வாக முடக்கல் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தமிழ் தேசிய கட்சிகளும் அமைப்புகளும் தீர்மானித்துள்தாக தெரியவருகின்றது.

இதற்கு முன்னர் நினைவேந்தலை நடாத்துவதற்கு இடமளிக்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் செல்வசந்நிதி ஆலய வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா குறிப்பிட்டார்.

இதேவேளை இந்த அறிவிப்பு வெளியாக்கப்பட்டதைத் தொடர்ந்து காவற்துறையினர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என். சிறிகாந்தாவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று முற்பகல் வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதிமன்றத்தினால் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
No comments: