இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு


கொரோனா தொற்றினால் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 178 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,நேற்றைய தித்தில் மாத்திரம் 80,500 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்தியாவில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 62 இலட்சத்து 22 ஆயிரத்து 519 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கமைய இந்தியாவில் கொரோனா தொற்றினால் இதுவரையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 97 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றினால்,அமெரிக்காவிலும் கடந்த 24 மணிநேரத்தில் 923 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,இதுவரையான காலப்பகுதியில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 10 ஆயிரத்து  731 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுறுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 81 ஆயிரத்து 197 பேராக அதிகரித்துள்ளதோடு,குறித்த காலப்பகுதியில் 5 ஆயிரத்து 717 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 38 இலட்சத்து 26 ஆயிரத்து 845 ஆக அதிகரித்துள்ளதோடு,10 இலட்சத்து 11 ஆயிரத்து 855 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியான 2 கோடியே 51 இலட்சத்து 28 ஆயிரத்து 828 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: