எதிர்வரும் பாராளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்பானத் தீர்மானம்

எதிர்வரும் 8ம் திகதி முதல் 11ம் திகதி வரை பாராளுமன்ற அமர்வுகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான செயற்குழுக் கூட்டத்தில் எதிர்வரும் 8ம் திகதி முதல் 11ம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாக் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.

எதிர்வரும் 8ம் திகதி சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாக இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதி அமைச்சின் செயற்திறன் அறிக்கை, மற்றும் வருட நடுப்பகுதி அரச நிதி நிலைமை தொடர்பான அறிக்கை என்பன குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

8ம் திகதி பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 6.30 வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் மறுநாள் 9ம் திகதி பிற்பகல் 1.00 மணி முதல் இரவு 7.30 மணிவரையும் பாராளுமன்றம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 10ம் திகதி காலை 10.30 முதல் முதல் இரவு 7.30 வரையும் பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் இறுதிநாள் 11ம் திகதி அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபக் கூற்று யோசனை முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அன்று காலை 10.30 முதல் மாலை 6.30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அங்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமரர் தொண்டமான் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்கவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

No comments: