கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்


கொழும்பின் சில பகுதிகளில்  நாளை 12 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை  தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை இரவு 8 மணி முதல் நாளை மறுதினம் காலை 8 மணி வரையில் இவ்வாறு  நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு 02, கொழும்பு 03, கொழும்பு 07, 08, 09, 10 மற்றும் கொழும்பு 11 ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு 12 மணி நேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளது.

No comments: