மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி யின் இறுதிக்கிரியைகள் இன்று


மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ் பி  பி கடந்த ஓகஸ்ட் மாதம் 5  ஆம் திகதி   சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த  50 நாட்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில்   தன்னுடைய 74 ஆவது வயதில் நேற்று நண்பகல் அவர் உயிரிழந்தார்.

இதேவேளை  பாடகர்   எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் மறைவுக்கு  இந்திய பிரதமர் நரேந்திர மோடி  உட்பட அரசியல்  பிரமுகர்கள், கிரிக்கட் வீரர்கள்  மற்றும் இந்திய திரையுலக கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல்  சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து  இன்று பிற்பகல்  திருவள்ளுர் மாவட்டம்  தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில்  மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின்   பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.பி யின் உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்யுமாறு தமிழக அரசு அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: