முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மேலதிக இடவசதி


வீதி ஒழுங்கு விதிகளை அமுல்படுத்தும் போது முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மேலதிக  இடவசதி  வழங்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

பொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் பொலிஸார் முன்னெடுத்த ஆய்வுகளைத் தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இன்று முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீதி ஒழுங்கை சட்டம் பரீட்சார்த்த நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று முதல் குறித்த சட்டம்  அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வீதி ஒழுங்கு முறைமைகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக  2 ஆயிரம் ரூபா அபராதம் விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments: