மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்து-இருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு – மண்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும்,இந்த விபத்தில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தினை தொடர்ந்து பொதுமக்களினால் பேருந்து சேதமாக்கப்பட்டதுடன், குறித்த பேருந்தின் சாரதியும் நடத்துனரும் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தினை தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்த நிலையில், விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: