தேங்காயின் விலை குறித்து வெளியான வர்த்தமானி அறிவிப்பை தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாம்-நுகர்வோர் விவகார அதிகார சபை


தேங்காயின் விலை தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி அறிவிப்பினை தவறாக புரிந்துகொண்டு கேலிக்குட்படுத்த வேண்டாமென நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  தேங்காயின் சுற்றளவை அடிப்படையாகக் கொண்டு  அவற்றை பிரிக்க வேண்டியது  வர்த்தகர்களின் பொறுப்பு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்களின் அடிப்படையில் ஒரு தேங்காயின் அதிகபட்ச சில்லறை  விலையாக 60 ரூபா முதல் 70 ரூபா வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 12 அங்குலத்திற்கும் குறைவான தேங்காய் 60 ரூபாவிற்கும், அதேபோன்று  12 முதல் 13 அங்குலம் வரையிலான தேங்காய் 65 ரூபாவிற்கும் மாத்திரமே விற்பனை செய்ய முடியும்.

அத்துடன், 13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காய் 70 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியுமென நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments: