பிரச்சினைகளை பேசி காலத்தை வீணடிப்பதை விட அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதே சிறந்தது-இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்ஒரு சமுகத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளை பேசிக்கொண்டு காலத்தை

கடப்பதைவிட அதற்கான தீர்வினைப் பெற்று கொடுப்பதே சிறந்த வழியென இலங்கை
தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் வீடமைப்பு மற்றும் தோட்ட
உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

04.09.2020.இன்று ஹட்டன் சென்ஜோன் பொஸ்கோ கல்லூரியில் புதிதாக
நிர்மானிக்கப்பட்ட ஒரு கோடியே 64இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாடசாலையினை பொருத்தவரையில் யார் வேண்டுமானாலும் அடிக்கல் நாட்டலாம் யார் வேண்டுமானாலும் கட்டிடங்களை திறந்து வைக்கலாம் அது இறுதியில் மாணவர்களுக்கே தான் சென்றடைகிறது என்பதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 

இந்த அரசாங்கத்தின் ஊடாக எனது அமைச்சிற்கு மாத்திரம் 1056 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அதற்கு காரணம் கடந்த நான்கு வருடகாலமாக செய்த வேலைத்திட்டங்கள் அனைத்தும் கடன் பெற்று செய்த வேலைத்திட்டங்களாகும்.

மலையகத்தில் உள்ள அரசியல்வாதிகள் சுயலாபத்தினை தேடி கொண்டு அவர்களுடைய
பெயர்களை சூடி கொள்கிறார்கள். அவ்வாறு இருக்க கூடாது அரசியல்வாதிகளாக
இருந்தாலும் சரி ஆசிரியர்களாக இருந்தாலும் சரி எதிர்கால மாணவர்களுக்கு
ஒரு முன்னுதாரணமாக செயல்படவேண்டும்.

மாணவர்களுக்கு பாடபுத்தகங்களில் கற்று கொடுப்பது மாத்திரம் கல்வி அல்ல விளையாட்டு துறையும் ஒரு கல்விதான்.மாணவர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட வேண்டும் அப்போதுதான் நாளை நல்ல தலைவர்களை உருவாக்கமுடியும்.கல்விக்கு எவ்வித தடங்களும்
இருக்ககூடாது.

இன்று உயர் கல்வியினை முடித்த மாணவர்கள் மத்தியில் தொழில் வாய்ப்பு என்பது ஒரு பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது. நாம் அனைவரும் அரச தொழில்வாய்பினை மாத்திரம் சிந்தித்து கொண்டு இருக்கின்றோம். தனியார் துறைகளையும் கைத்தொழில்களையும் நாம் நம்ப வேண்டும். 

இன்னும் இரண்டு வாரங்களில் நாம் ஒரு தொழிற்சந்தையினை நடாத்த உள்ளோம் அதற்கான சில நிறுவனங்களை அழைத்து கலந்துரையாட இருக்கின்றோம் என குறிப்பிட்டார்.

No comments: