ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட வர்த்தகநிலையங்கள் மற்றும் உணவகங்களில் திடீர் பரிசோதனை.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் ,தங்குமிட விடுதிகள், பேக்கரிகள் போன்றவற்றை 17.09.2020.வியாழக்கிழமை காலை முதல் அம்பகமுவ பிரதேச பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர்  சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

இதன் போது  ஹட்டன் நகரப்பகுதியில் உள்ள  உணவகங்கள், பேக்கரிகள் வர்த்தக நிலையங்கள், தங்குமிட விடுதிகள் எனபன சோதனையிட்ட போது மனித பாவனைக்கு உதவாத பொருட்கள் சில மீட்கப்பட்டு சுகாதார பரிசோதகர்களினால் அழிக்கப்பட்டது. இதேவேளை மனித பாவனைக்கு உதவாத பொருட்களை தம்வசம் வைத்திருந்த வர்த்தகர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

சுத்தம் மற்றும் சுகாதார முறையினை   கடைபிடிக்காத தங்குமிட விடுதிகளின் உரிமையாளர்கள் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு 14 நாட்களுக்குள் சரிசெய்து  மீண்டும் காண்பிக்கபடாவிட்டால் நீதிமன்றத்தின் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்படுமென பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கப்பட்டது. 

இந்த சோதனை நடவடிக்கைக்கு 25 சுகாதார பொது சகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்பட்டதோடு நாளையும் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கபடுமென அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். 


No comments: