கல்முனை வடக்கில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் புதிய இளைஞர் கழகங்கள் உருவாக்கும் செயற்திட்டம் முன்னெடுப்பு

 செ.துஜியந்தன் 


இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் கல்வி கற்கும் 15 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஒன்றிணைத்து இளைஞர் கழகங்கள் உருவாக்கப்பட்டுவருகின்றன.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் இளைஞர் கழகங்கள் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் மூலம் உருவாக்கப்பட்டுவருகின்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவின் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.பிரபாகரன் தலைமையிலான குழுவினர் கல்முனை கல்வி வலயத்தின் தமிழ்க் கல்விக் கோட்டப்பாடசாலைகளுக்கு விஜயம் சென்று மாணவர்களுக்கான இளைஞர் கழகங்களை ஸ்தாபிக்கும் நிகழ்வுகளை முன்னெடுத்துவருகின்றார்.

அதற்கமைய சேனைக்குடியிருப்பு கணேச மகா வித்தியாலயத்தில் அதிபர் வி.சஜீந்திரன் தலைமையில் பாடசாலையில் 15 வயது தொடககம் 19 வயது வரையுள்ள மாணவர்களை ஒன்றிணைத்து பாடசாலை இளைஞர்  கழகத்திற்கான புதிய நிர்வாகிகளை தெரிவு செய்தனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இருந்து ஏழு(07) இளைஞர் கழகங்களையும், அத்துடன் பிரதேசத்தின் கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் 29 இளைஞர் கழகங்களையும், அதற்கான நிர்வாக கட்டமைபபுக்களையும் உருவாக்கி வருவதாகவும் இதன் மூலம் எதிர்காலத்தில் விளையாட்டு, கலாசாரம், தலைமைத்துவப் பயிற்சிகள் ஆகியன விளையாட்டு தறை அமைச்சின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இளைஞர் சேவைகள உத்தியோகத்தர் கே.பிரபாகரன் தெரிவித்தார்.


No comments: