கடும் மழையின் காரணமாக ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


மலையகத்தில் தொடரும் கடும் மழையின் காரணமாக ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை பகுதியில் மண்மேடு ஒன்றுடன் மரம் ஒன்று முறிந்து விழுந்தமையினால் ஹட்டன் கொழும்பு,  ஹட்டன், கண்டி மற்றும் நாவலப்பிட்டி பகுதிக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் இன்று மாலை 03.30மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை குறித்த மரத்தினை அகற்ற பொலிஸார் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் நடவடிக்கையின் மேற்கொண்டு வருதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். 

அத்துடன் பெய்துவரும் கடும் மழை காரணமாக கெனியன் மற்றும் லக்ஸபான ஆகிய நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: