மண்சரிவு அபாய எச்சரிக்கை


நாட்டின் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் 200 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ள நிலையிலேயே இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை, காலி, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு  மண்சரிவு அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளதாக  தெரியவந்துள்ளது

மேலும் அனர்த்தங்கள் மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, மக்கள் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


No comments: