பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் கைது


மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய  400 க்கும்  மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரையான 12 மணித்தியால காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது ஹெரோயின் மோசடி தொடர்பில் 330 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: