மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு


மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 392 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி  வரை குறித்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களுள் 152 பேர் போதைப்பொருள் மோசடியுடன் தொடர்புடைய  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதோடு,மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் வழங்கியுள்ள அறிவுறுத்தலின் பிரகாரம் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: