நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம்


நாட்டில் நேற்றைய தினம் 39 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 16 பேருக்கும்,ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 12 பேருக்கும், மாலைத்தீவில் இருந்து நாடு  திரும்பிய 2 பேருக்கும், தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பிய உக்ரைன் பிரஜை ஒருவருக்கும்,எத்தியோப்பியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும்,குவைட்டில் இருந்து நாடு திரும்பிய 6 பேருக்கும் மற்றும் செங்கடல் பிராந்திய கடலோடி ஒருவருக்கும்  நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3234 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுறுதியான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று  வந்தவர்களில் நேற்றைய தினம் 13 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதோடு, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2996 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுறுதியான 226 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

No comments: