நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 111 இலங்கையர்கள்  நாடு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய டுபாயில் இருந்து 22 பேரும், கட்டாரில் இருந்து 52 பேரும், ஜப்பானில் இருந்து 30 பேரும், அவுஸ்ரேலியாவில் இருந்து 07 பேரும் இன்று நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments: