நான்கு வருடங்களுக்குள் நாட்டின் அனைத்து வீதிகளும் புனரமைக்கப்படும்


நாட்டின் அனைத்து வீதிகளும் எதிர்வரும் நான்கு வருடங்களுக்குள் புனரமைக்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களின் பங்களிப்பு மற்றும் பொறுப்புகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதி தெளிவுப்படுத்தியதோடு,அமைச்சர்கள் அல்லாத இளம் உறுப்பினர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்குவதற்கான திட்டத்தை வகுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: