சீனாகலை தோட்ட பகுதியில் பத்து வயது சிறுவனை தூக்கி பூமியில் அடித்தநபர் கைது

(சதீஸ்)


பொகவந்தலாவ சீனாகலை தோட்ட பகுதியில் பத்து வயது சிறுவனை தூக்கி நிலத்தில் அடித்தாக கூறப்படும் சந்தேக நபரை பொகவந்தலாவ பொலிஸார் 12.09.2020சனிக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பொகவந்தலாவ பிரதேச பாடசாலை ஒன்றில் தரம்05ல் கல்வி பயிலும் இரண்டு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையினை பாடசாலை நிர்வாகம் சமரசம் செய்து இரண்டு மாணவர்களையும் எச்சரித்து அனுப்பி வைத்ததை தொடர்ந்து 

மற்றய மாணவனால் தாக்கப்பட்ட மாணவன் இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தை தந்தையிடம் கூறியதை அடுத்து அத்திரமடைந்த தந்தை தாக்கிய மாணவனின் வீட்டுக்கு சென்று குறித்த மாணவனை தூக்கி நிலத்தில் அடத்துள்ளதாகவும் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் தொடர்ந்தும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

தாக்குதலுக்கு உள்ளான மாணவனுக்கு பாரிய பாதிப்புகள் எதுவும் இல்லை என வைத்தியசாலையின் பேச்சாளர் ஏ. எஸ்.கே. ஜயசூரிய தெரிவித்தார்

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேக நபரை 13.09.2020.ஞாயிற்றுகிழமை ஹட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments: