ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை ரம்பாந்தென்ன பகுதியில் சரிந்து விழுந்த பாரிய கற்பாறை உடைத்து தகர்த்தப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். 

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்களை கொண்டு குறித்த பாரிய கற்பறை உடைத்து தகர்த்தப்பட்டுள்ளது. 

இதேவேளை குறித்த பகுதியில் மேலும் சில கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுகின்றமையால் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதோடு மறு அறிவித்தல்வரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். No comments: