நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்கள்


வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட 30 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த வருடங்களை காட்டிலும் இந்த வருடத்தில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும்,நாட்டில் தொடர்ந்து நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதனால் பொதுமக்கள் அது தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

No comments: