கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 8ம் திகதி முதல் வழமை போல மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பல கட்டங்களாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என  கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 2ம் திகதி தொடக்கம், தரம் 6 முதல் 13 வரையிலான கல்வி நடவடிக்கைகள் வழமை போல் ஆரம்பமாகியது.

ஆரம்ப வகுப்புக்களின் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் நாளை பாடசாலைக்கு வருவார்கள் எனவும் கல்வி நடவடிக்கைகள் வழமை போல் ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: