பாடசாலை மாணவர்களின் போசணை மட்டத்தை மேம்படுத்த பிரதமர் ஆலோசனை


பாடசாலை மாணவர்களின் போசணை மட்டத்தை மேம்படுத்துவதற்கு தினமும் ஒரு முட்டையை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சருக்கு பிரதமர் மஹிந்த  ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தினர் மற்றும் முட்டை உற்பத்தியாளர்களின் சங்கத்தினர் ஆகியோரை விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்த போதே பிரதமர் இதனை குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments: