வாக்காளர் இடாப்பு மறுசீரமைப்பு படிவங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்



வாக்காளர் இடாப்பு மறுசீரமைப்பு படிவங்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை  இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய இந்த மாதம் இறுதிவரை குறித்த  நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளதாகவும் குறித்த நடவடிக்கைகளை விரிவாக முன்னெடுக்குமாறு கிராம அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று தாக்கம் காரணமாக  வாக்காளர் இடாப்பு மறுசீரமைப்பு படிவங்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.குறித்த நடவடிக்கைகளை விரிவாக முன்னெடுக்குமாறு கிராம அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: