நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை


நாட்டில் நிலவிவரும் மழையுடனான வானிலைக் காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தின், புலத்சிங்கள பிரதேச செயலக பிரிவிற்கும் கேகாலை மாவட்டத்தின் தெரனியகல, தெஹியோவிட்ட மற்றும் யட்டியாந்தோட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மஞ்சள் நிற அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நுவரெலிய மாவட்டத்தின் கொத்மலை மற்றும் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுல்ல, எலபாத்த, எஹெலியகொட, இரத்தினபுரி மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மஞ்சள் நிற அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments: