நாடளாவிய ரீதியில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை


நாடளாவிய ரீதியில் 15,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, பாடசாலை மாணவர்களும், இடமாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆசிரியர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், 19 ஆசிரியர் கல்லூரிகளில் இருந்து 5000 ஆசிரியர்கள் வெளியேறியுள்ளதோடு, அவர்களுக்கு நியமனம் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், உடனடியாக ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: