வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்


பலத்த மழை வீழ்ச்சி தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிகப்பு எச்சரிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் வடமேல் மாகாணத்தில் தற்காலிகமாக மழைவீழ்ச்சி அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலின் சில பிரதேசங்களிலும் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய கனமழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

No comments: